சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மருத்துவம், பல் மருத்துவம், விவசாயம் உள்ளிட்ட படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் தேதி ஜூன் 22 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதுசிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மருத்துவம், பல் மருத்துவம், விவசாயம் உள்ளிட்ட படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் தேதி ஜூன் 22 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

 இப் பல்கலைக்கழக 2015-16ஆம் ஆண்டுக்கான மருத்துவம், பல் மருத்துவம், பி.எஸ்சி விவசாயம், தோட்டக்கலை, பி.பார்ம், பி.எஸ்சி நர்சிங், பி.பி.டி மற்றும் ஐந்தாண்டு ஒருங்கிணைந்த முதுநிலை படிப்புகளுக்கான அனுமதி சேர்க்கை கையேடு, விண்ணப்ப விற்பனை மற்றும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அனுப்ப ஜூன் 22 வரை தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது என பதிவாளர் ஜெ.வசந்தகுமார் தெரிவித்தார்.

 முன்னதாக விண்ணப்பிக்க கடைசி தேதி ஜூன் 12 என அறிவிக்கப்பட்டிருந்தது.

மேற்கண்ட படிப்புகளுக்கான விண்ணப்பங்களை அண்ணாமலைநகரில் உள்ள பல்கலைக்கழக நிர்வாக அலுவலகத்திலும், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தொலைதூரக் கல்வி இயக்கக படிப்பு மையங்களிலும் பெற்றுக்கொள்ளலாம்.

மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்புகளுக்கு ரூ.1,500 செலுத்தியும், பி.எஸ்சி நர்சிங், பி.பி.டி, பி.பார்ம், பி.எஸ்சி வேளாண்மை, தோட்டக்கலை படிப்புகளுக்கு ரூ.800 செலுத்தியும், (எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு ரூ.400), ஐந்தாண்டு ஒருங்கிணைந்த முதுநிலை பட்டப்படிப்புகளுக்கு ரூ.400 செலுத்தியும் (எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு ரூ.200) விண்ணப்பங்களைப் பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய கடைசி தேதி ஜூன் 22 ஆகும்.

 மருத்துவம், பல் மருத்துவம் மற்றும் விவசாயப் படிப்புகளுக்கு தமிழக அரசு இட ஒதுக்கீடு விதிப்படியும், மாணவர்கள் மேல்நிலைப் பள்ளி அல்லது அதற்கு இணையான படிப்பில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையிலும் சேர்க்கைக்கான பட்டியல் தயார் செய்யப்படும். சேர்க்கைக்கு விண்ணப்பித்த மாணவர்கள் அவர்கள் 12-ஆம் வகுப்புத் தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் கலந்தாய்வுக்கு அழைக்கப்படுவார்கள். கலந்தாய்வு தேதி விவரம் பின்னர் அறிவிக்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு பல்கலைக்கழக இணையதளம் முகவரியில் பார்க்கவும். மேலும் மின்னஞ்சல் முகவரியையும் மற்றும் உதவி மைய தொலைபேசி எண்கள்: 04144-238348, 238349 ஆகியவற்றையும் தொடர்பு கொண்டு தகவல் தெரிந்து கொள்ளலாம்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்புக்கான விண்ணப்ப விற்பனை மற்றும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய தேதி ஜூன் 12-டுடன் முடிவுற்றது. 

பொறியியல் புலத்தில் 10 படிப்புகளுக்கான அனுமதி சேர்க்கை தனி கலந்தாய்வு மூலம் நடைபெற உள்ளது. கலந்தாய்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவித்தன.