மின்தடை ஏற்படும் நேரம் குறித்து இனிமேல் எஸ்எம்எஸ் அனுப்பப்படும் என மின் விநியோகத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

செ மின்தடை ஏற்படும் நேரம் குறித்து இனிமேல் எஸ்எம்எஸ் அனுப்பப்படும் என மின் விநியோகத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கரண்ட் போனா, எப்ப வரும்னு காத்துட்டு இருப்போம். மின்வாரிய அலுவலகத்துக்கு போன் பண்ணினாலும் ரிங் ஆயிட்டே இருக்கும். யாரும் எடுத்து பதில் தர மாட்டார்கள். அப்படியே எடுத்தாலும் சரியான பதில் வராது. இந்த தொல்லைகள் எல்லாம் இனி இருக்காது.

ஏற்கனவே மின்கட்டணம் குறித்து எஸ்எம்எஸ் அனுப்பப்பட்டு வருகிறது. இதன் அடுத்த கட்டமாக அறிவிக்கப்பட்ட மின்தடை, தீடீரென ஏற்படும் மின்தடை குறித்து எஸ்எம்எஸ் அனுப்பப்பட உள்ளது.

இதுகுறித்து மின் விநியோகத்துறை அதிகாரிகள் கூறுகையில், ''மத்திய அரசின் மறுசீரமைக்கப்பட்ட மின் மேம்பாடு சீரமைப்பு திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் உள்ள 110 நகரங்களில் மின் மேம்பாட்டு பணிகள் நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக வாடிக்கையாளர்களுக்கு எஸ்எம்எஸ் அனுப்பும் திட்டமும் செயல்படுத்தப்பட உள்ளது.

இதற்கான தகவல்களை கொடுக்கும் சாப்ட்வேர் தயாரிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. பகுதி வாரியாக மின் விநியோகம் செய்யும்  அமைப்புகளின் தகவல்களும் சேகரிக்கப்பட்டு வருகிறது. அந்தப் பணிகள் முடிந்த பிறகு, கணினி வழியாக மின்தடைக்கான எஸ்எம்எஸ் அறிவிப்பு வாடிக்கையாளர்களுக்கு வரும்.

ஏற்கனவே 1 கோடியே 8 லட்சம் பேர் எஸ்எம்எஸ் மூலம் மின்கட்டண சேவையை பெற்று வருகின்றனர். இந்த சேவையை அறிமுகப்படுத்திய பிறகு கடைசி தேதிக்கு பின் கட்டணம் செலுத்துபவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது'' என்றனர்.

0 comments:

Post a Comment